
PUS பற்றி – புதியதோர் உலகம் செய்வோம்
புதியதோர் உலகம் செய்வோம் (PUS) என்பது, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையால் UNICEF YuWaah உடன் இணைந்து தொடங்கப்பட்ட, புதிய முனைவுடைய இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாட்டுத் தளமாகும். மாநிலத்தின் மிகப்பெரிய தன்னார்வலர் இயக்கங்களில் ஒன்றாக உருவாகியுள்ள இந்த தளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னேற்றவும், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனைக் மேம்படுத்தவும், நிலைத்த வளர்ச்சியை நோக்கி செயல்படவும் பொதுமக்களை ஒன்றிணைக்கிறது. PUS இன் மைய நோக்கம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு உயிரோட்டமான தன்னார்வ சேவை பண்பாட்டை வளர்த்தெடுத்து,
இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பொறுப்புடன் பாதுகாக்கும் மனப்பான்மையை ஊக்குவிப்பதாகும்.
எங்கள் நோக்கமும் இலட்சியமும்
எங்கள் முயற்சியில் இணையுங்கள்
வருங்காலத் தலைமுறைகளுக்காக, ஒன்றிணைந்து பசுமைமிக்கவும், நிலைத்தன்மைமிக்கவும் ஒரு எதிர்காலத்தை உருவாக்கலாம்.






